search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் அமைப்பு பதவி"

    லாலு பிரசாத் கட்சியில் ‘சீட்’ வழங்குவதில் ஏற்பட்ட மோதல் காரணமாக தேஜ் பிரதாப் யாதவ், கட்சியின் மாணவர் அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். #LaluPrasad #TejPratap
    பாட்னா:

    பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றன.

    இந்த கூட்டணிக்கு சரியான போட்டியை ஏற்படுத்துகிற விதத்தில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ், ராஷ்ட்ரிய லோக்சமதா, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மத சார்பற்றது), விகாஷீல் இன்சான் கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    இந்த நிலையில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியில் ‘சீட்’ வழங்குவதில் மோதல் வெடித்துள்ளது. லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் ஆதரவாளர்களுக்கு ‘சீட்’ மறுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதேபோன்று கூட்டணி கட்சித்தலைவர்களுடனான பேச்சுவார்த்தையில் லாலு பிரசாத்தின் இளையமகன் தேஜஸ்வி பிரசாத் யாதவை ஈடுபடுத்தி விட்டு, தேஜ் பிரதாப் யாதவை ஓரங்கட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இதில் கடும் அதிருப்தி அடைந்த தேஜ் பிரதாப் யாதவ், கட்சியின் மாணவர் அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து நேற்று விலகினார். இதை ‘பேஸ்புக்’ பக்கத்தில் அவரே தெரிவித்துள்ளார். 
    ×